الصافات

تفسير سورة الصافات

الترجمة التاميلية

தமிழ்

الترجمة التاميلية

ترجمة معاني القرآن الكريم للغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي، نشرها مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة. عام الطبعة 1434هـ.

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالصَّافَّاتِ صَفًّا﴾

1. அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக!

﴿فَالزَّاجِرَاتِ زَجْرًا﴾

2. (தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக!

﴿فَالتَّالِيَاتِ ذِكْرًا﴾

3. (இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக!

﴿إِنَّ إِلَٰهَكُمْ لَوَاحِدٌ﴾

4. நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான்.

﴿رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ﴾

5. வானங்கள், பூமி இன்னும் அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன் அவனே. கீழ் திசை(கள் மேல் திசை)களின் இறைவனும் அவனே.

﴿إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ﴾

6.
நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம்.

﴿وَحِفْظًا مِنْ كُلِّ شَيْطَانٍ مَارِدٍ﴾

7. மிக்க விஷமிகளான ஷைத்தான்களுக்கு ஒரு தடையாகவும் (ஆக்கி வைத்தோம்).

﴿لَا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِنْ كُلِّ جَانِبٍ﴾

8. மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது.
(ஏனென்றால், அதை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளிகளால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர்.

﴿دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ﴾

9. மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.

﴿إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ﴾

10.
(தப்பித் தவறி ஒரு வார்த்தையை) பறித்துச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்து விட்டெரியும்) பிரகாசமான நெருப்பு பின்தொடர்கிறது.

﴿فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَمْ مَنْ خَلَقْنَا ۚ إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لَازِبٍ﴾

11.
(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீர் கேட்பீராக: (இறந்த பின்) உங்களைப் படைப்பது சிரமமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவற்றைப் படைப்பது சிரமமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கிறோம்.

﴿بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ﴾

12. மாறாக, (நபியே!) நீர் (அல்லாஹ்வின் வல்லமையைக்கண்டு) ஆச்சரியப்படுகிறீர்; அவர்களோ (அதைப்) பரிகசிக்கின்றனர்.

﴿وَإِذَا ذُكِّرُوا لَا يَذْكُرُونَ﴾

13. மேலும், அவர்களுக்கு நல்லுபதேசம் கூறிய போதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை.

﴿وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخِرُونَ﴾

14. எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.

﴿وَقَالُوا إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ﴾

15. மேலும், ‘‘ இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்றும் கூறுகின்றனர்.

﴿أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ﴾

16. ‘‘நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும், போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்),

﴿أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ﴾

17. (அவ்வாறே) நம் மூதாதைகளுமா? (எழுப்பப்படுவார்கள்'' என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.)

﴿قُلْ نَعَمْ وَأَنْتُمْ دَاخِرُونَ﴾

18. அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் எழுப்பப்படுவது) உண்மைதான். அச்சமயம் நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்.

﴿فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ فَإِذَا هُمْ يَنْظُرُونَ﴾

19. அது ஒரே ஒரு சப்தம்தான்; உடனே அவர்கள் (எழுந்து நின்று திருதிருவென்று) விழிப்பார்கள்.

﴿وَقَالُوا يَا وَيْلَنَا هَٰذَا يَوْمُ الدِّينِ﴾

20. நாங்கள் கெட்டோம்! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே'' என்றும் அவர்கள் கூறுவார்கள்.

﴿هَٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ﴾

21.
(அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த தீர்ப்பு நாள் இதுதான்'' (என்றும் கூறப்படும்).

﴿۞ احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ﴾

22.
அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் நீங்கள் ஒன்று சேர்த்து,

﴿مِنْ دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَىٰ صِرَاطِ الْجَحِيمِ﴾

23. ‘‘அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்'' (என்றும்),

﴿وَقِفُوهُمْ ۖ إِنَّهُمْ مَسْئُولُونَ﴾

24.
‘‘அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கிறது'' (என்றும் கூறப்படும்).

﴿مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ﴾

25.
‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை'' (என்றும் கேட்கப்படும்).

﴿بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ﴾

26. எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்தவர்களாக இருப்பார்கள்.

﴿وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ﴾

27, 28.
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.

﴿قَالُوا إِنَّكُمْ كُنْتُمْ تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ﴾

27, 28.
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.

﴿قَالُوا بَلْ لَمْ تَكُونُوا مُؤْمِنِينَ﴾

29. அதற்கு அ(த்தலை)வர்கள் ‘‘அவ்வாறல்ல. (நாங்கள் உங்களைத் தடை செய்யவில்லை.) நீங்கள்தான் நம்பிக்கை கொள்ளவில்லை.''

﴿وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ ۖ بَلْ كُنْتُمْ قَوْمًا طَاغِينَ﴾

30. ‘‘எங்களுக்கு உங்கள் மீது ஓர் அதிகாரமும் இருக்கவில்லை. நீங்கள் தான் பொல்லாத மக்களாக இருந்தீர்கள்.

﴿فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا ۖ إِنَّا لَذَائِقُونَ﴾

31. ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்களே.

﴿فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ﴾

32. நிச்சயமாக நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். ஏனென்றால், நாங்கள் வழிகெட்டே போயிருந்தோம் என்று கூறுவார்கள்.

﴿فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ﴾

33. முடிவில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அன்றைய தினம் வேதனையில் (சம) பங்காளிகள்தான்.

﴿إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ﴾

34. நிச்சயமாக நாம், குற்றவாளிகளை இவ்வாறே நடத்துவோம்.

﴿إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ﴾

35.
‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் அறவே இல்லை (ஆகவே, அவனையே வணங்குங்கள்)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொள்கின்றனர்,

﴿وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونٍ﴾

36.
‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

﴿بَلْ جَاءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِينَ﴾

37. ‘‘(அவர் பைத்தியக்காரர் அல்ல.) மாறாக, அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.)

﴿إِنَّكُمْ لَذَائِقُو الْعَذَابِ الْأَلِيمِ﴾

38. ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான்.

﴿وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُونَ﴾

39.
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்படவில்லை'' (என்றும் கூறப்படும்).

﴿إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ﴾

40. கலப்பற்ற, மனத்தூய்மையுடைய அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.

﴿أُولَٰئِكَ لَهُمْ رِزْقٌ مَعْلُومٌ﴾

41. அவர்களுக்கு (அல்லாஹ்வின் புறத்திலிருந்து உயர்ரக) பழக்கமான உணவு தயார் செய்யப்பட்டிருக்கும்.

﴿فَوَاكِهُ ۖ وَهُمْ مُكْرَمُونَ﴾

42. (இன்னும், சுவையான) கனிவர்க்கங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்கள் (இவ்வாறு) கண்ணியப்படுத்தப்படுவார்கள்.

﴿فِي جَنَّاتِ النَّعِيمِ﴾

43. இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்.

﴿عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ﴾

44. கட்டில்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாகப் பேசிக்கொண்டு) உட்கார்ந்திருப்பார்கள்.

﴿يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِنْ مَعِينٍ﴾

45. மிகத் தெளிவான ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.

﴿بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ﴾

46. (அது) மிக்க வெண்மையானதாகவும், குடிப்பவர்களுக்கு மிக்க இன்பமானதாகவும் இருக்கும்.

﴿لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ﴾

47. அதில் போதையே இருக்காது; அதனால், அவர்களுடைய அறிவும் நீங்கிவிடாது.

﴿وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِينٌ﴾

48. அவர்களிடத்தில் கீழ் நோக்கிய, அடக்கமான பார்வையையுடைய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழகிகளும் இருப்பார்கள்.

﴿كَأَنَّهُنَّ بَيْضٌ مَكْنُونٌ﴾

49.
அவர்களின் நிறம் (இறக்கைகளில்) மறைக்கப்பட்ட (நெருப்புக் கோழியின் இலேசான மஞ்சள் வர்ணமுடைய) முட்டைகளைப் போலிருக்கும்.

﴿فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ﴾

50.
அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி, (இம்மையில் நடைபெற்றவற்றைப் பற்றி மகிழ்ச்சியுடன்) பேசிக் கொண்டிருப்பார்கள்.

﴿قَالَ قَائِلٌ مِنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِينٌ﴾

51. அவர்களில் ஒருவர் கூறுவார்: ‘‘(இம்மையில்) மெய்யாகவே எனக்கொரு நண்பன் இருந்தான்.

﴿يَقُولُ أَإِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِينَ﴾

52. அவன் என்னை நோக்கி ‘‘நிச்சயமாக நீ இதை நம்புகிறாயா?'' என்று கேட்டான்.

﴿أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَدِينُونَ﴾

53.
என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?'' என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தான்.

﴿قَالَ هَلْ أَنْتُمْ مُطَّلِعُونَ﴾

54. ‘‘(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கூறி,

﴿فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ﴾

55. அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு,

﴿قَالَ تَاللَّهِ إِنْ كِدْتَ لَتُرْدِينِ﴾

56. (அவனை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்.''

﴿وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنْتُ مِنَ الْمُحْضَرِينَ﴾

57.
‘‘என் இறைவனுடைய அருள் எனக்குக் கிடைக்காதிருந்தால், நானும் (உன்னுடன் நரகத்தில்) சேர்க்கப்பட்டே இருப்பேன்.

﴿أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ﴾

58. (இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா?

﴿إِلَّا مَوْتَتَنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ﴾

59. (பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சொர்க்கத்தில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்'' (என்றும் கூறுவார்).

﴿إِنَّ هَٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ﴾

60. நிச்சயமாக இதுதான் மகத்தான பாக்கியமாகும்.

﴿لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ﴾

61. ஏதும் நன்மை செய்யக்கூடியவர்கள் எல்லோரும் இதைப் போன்ற (நற்பேறுகளை பெறுவ)தற்காகவே பாடுபடவும்.

﴿أَذَٰلِكَ خَيْرٌ نُزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ﴾

62. (சொர்க்கத்தில் கிடைக்கும்) இது மேலான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம் மேலான விருந்தா?

﴿إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ﴾

63. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை வேதனை செய்வதற்காகவே அதை உண்டு பண்ணி இருக்கிறோம்.

﴿إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ﴾

64. மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு மரமாகும்.

﴿طَلْعُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ﴾

65. அதன் கிளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும்.

﴿فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ﴾

66.
நிச்சயமாக அவர்கள் (தங்கள் பசிக் கொடுமையினால்) அதை புசிப்பார்கள்! இன்னும், (வேறு உணவின்றி) அதிலிருந்தே (தங்கள்) வயிறுகளை நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.

﴿ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِنْ حَمِيمٍ﴾

67.
பின்னர், அதற்கு மேலும் நரகத்தில் கொதித்து சூடேறி இருக்கும் (சீழ் கலந்த) தண்ணீரே நிச்சயமாக அவர்களுக்கு பானமாக கொடுக்கப்படும்.

﴿ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى الْجَحِيمِ﴾

68. (இவற்றைப் புசித்துக் குடித்த) பின்னர், நிச்சயமாக ‘ஜஹீம்' என்ற நரகத்திற்கே திருப்பப்படுவார்கள்.

﴿إِنَّهُمْ أَلْفَوْا آبَاءَهُمْ ضَالِّينَ﴾

69. இவர்கள் தங்கள் மூதாதைகளை மெய்யாகவே வழி கெட்டவர்களாகக் கண்டு கொண்டார்கள்.

﴿فَهُمْ عَلَىٰ آثَارِهِمْ يُهْرَعُونَ﴾

70. அவ்வாறிருந்தும், அவர்களுடைய அடிச்சுவட்டையே இவர்கள் பின்பற்றி ஓடினார்கள்.

﴿وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الْأَوَّلِينَ﴾

71. இவர்களுக்கு முன்னிருந்த பெரும்பாலானவர்களும் (இவ்வாறே) தவறான வழியில் சென்றனர்.

﴿وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِمْ مُنْذِرِينَ﴾

72. நிச்சயமாக நாம் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கும் (நம்) தூதர்களை அனுப்பியே வைத்தோம்.

﴿فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِينَ﴾

73. ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட இவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) பார்ப்பீராக.

﴿إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ﴾

74.
அல்லாஹ்வுடைய பரிசுத்த எண்ணமுள்ள அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் எல்லோரும்) நம் வேதனைக்கு ஆளாகி விட்டார்கள்.

﴿وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ﴾

75. நூஹ் (நபி) நம்மிடம் (உதவி கோரி) பிரார்த்தனை செய்தார். (நாமோ) பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவர்களில் மிக்க சிறந்தவர்கள்.

﴿وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ﴾

76. ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடுமையான சிரமத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.

﴿وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ﴾

77. அவர்களுடைய சந்ததிகளைப் பிற்காலத்தில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.

﴿وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ﴾

78. அவருடைய கீர்த்தியையும், பின்னுள்ளோர்களில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.

﴿سَلَامٌ عَلَىٰ نُوحٍ فِي الْعَالَمِينَ﴾

79. ‘‘ஸலாம்'' ஈடேற்றம் நூஹுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது.

﴿إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ﴾

80. இவ்வாறே நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.

﴿إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ﴾

81. (நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் ஒருவராகவே இருந்தார்.

﴿ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ﴾

82.
(ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம்.

﴿۞ وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ﴾

83. நிச்சயமாக நூஹ் (நபி) உடைய வழியைப் பின்பற்றியவர்தான் இப்ராஹீம்.

﴿إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ﴾

84. அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில்,

﴿إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ﴾

85. அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்,

﴿أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ﴾

86. ‘‘நீங்கள் அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையே விரும்புகிறீர்களா?

﴿فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ﴾

87.
அவ்வாறாயின், உலகத்தாரைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?'' (என்று கேட்டார்).

﴿فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ﴾

88. ‘‘பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்தார்.

﴿فَقَالَ إِنِّي سَقِيمٌ﴾

89. நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் (போல் இருக்கிறது)'' என்று கூறினார்,

﴿فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ﴾

90. ஆகவே, அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்று விட்டனர்.

﴿فَرَاغَ إِلَىٰ آلِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ﴾

91. (பின்னர்) அவர், (அவர்களுடைய கோயிலுக்குள்) அவர்களுடைய தெய்வங்களிடம் இரகசியமாகச் சென்றார்.
(விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) ‘‘நீங்கள் இவற்றை ஏன் புசிப்பதில்லை?

﴿مَا لَكُمْ لَا تَنْطِقُونَ﴾

92. உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?'' என்று கேட்டார். (ஆனால், அவை பதில் அளிக்கவில்லை.)

﴿فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا بِالْيَمِينِ﴾

93. ஆகவே, அவற்றைப் பலமாக அடித்து (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார்.

﴿فَأَقْبَلُوا إِلَيْهِ يَزِفُّونَ﴾

94.
ஆகவே, (திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதைக் கண்டதும் அதைப் பற்றிக் கேட்கவே) இப்ராஹீமிடம் ஓடி வந்தனர்.

﴿قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ﴾

95. அவர், (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா?

﴿وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ﴾

96. உங்களையும், நீங்கள் சித்தரித்த அவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்'' என்றார்.

﴿قَالُوا ابْنُوا لَهُ بُنْيَانًا فَأَلْقُوهُ فِي الْجَحِيمِ﴾

97.
(அதற்கு அவர்கள் பதில்கூற வகையறியாது கோபம் கொண்டு,) ‘‘இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.

﴿فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ﴾

98. இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக்கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவானவர்களாக ஆக்கி விட்டோம்.

﴿وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهْدِينِ﴾

99. பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) ‘‘நான் என் இறைவனிடமே செல்கிறேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்'' என்று கூறினார்.

﴿رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ﴾

100. ‘‘என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!'' (என்றார்.)

﴿فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ﴾

101. ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.

﴿فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ﴾

102.
(அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தன் மகனை நோக்கி) ‘‘என் அருமை மைந்தனே! நான் உன்னை (என் கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?'' என்று கேட்டார். அதற்கவர், ‘‘என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள்.
அல்லாஹ் அருள் புரிந்தால் (அதைச் சகித்துக் கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்'' என்று கூறினார்.

﴿فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ﴾

103.
ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் பணிந்து, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) அவரை முகங்குப்புறக் கிடத்தினார்.

﴿وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ﴾

104. அச்சமயம் நாம் ‘‘இப்ராஹீமே!'' என அழைத்தோம்:

﴿قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ﴾

105.
உண்மையாகவே நீர் உமது கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர் என்றும், நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்'' (என்றும் கூறி,)

﴿إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ﴾

106. ‘‘நிச்சயமாக இதுதான் மாபெரும் சோதனையாகும்'' (என்றும் கூறினோம்).

﴿وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ﴾

107. ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

﴿وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ﴾

108. அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்.

﴿سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ﴾

109.
(ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) ‘‘இப்ராஹீமுக்கு ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாவதாகுக' (என்றும் கூறுகின்றனர்).

﴿كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ﴾

110. இவ்வாறே, நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

﴿إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ﴾

111. நிச்சயமாக அவர் மிக்க நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் இருந்தார்.

﴿وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِنَ الصَّالِحِينَ﴾

112.
இதன் பின்னர், நல்லடியார்களிலுள்ள இஸ்ஹாக் நபியை அவருக்கு (மற்றுமொரு மகனாகத் தருவதாக) நற்செய்தி கூறினோம்.

﴿وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَىٰ إِسْحَاقَ ۚ وَمِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِنَفْسِهِ مُبِينٌ﴾

113. அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நம் நற்பாக்கியங்களைச் சொரிந்தோம்.
அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர்.

﴿وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ﴾

114. நிச்சயமாக நாம் மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் அருள் புரிந்தோம்.

﴿وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيمِ﴾

115. அவ்விருவரையும், அவர்களுடைய மக்களையும் கடுமையான துன்பத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.

﴿وَنَصَرْنَاهُمْ فَكَانُوا هُمُ الْغَالِبِينَ﴾

116. அவர்களுக்கு உதவிபுரிந்தோம். ஆகவே, அவர்கள் (தங்கள் எதிரிகளை) வெற்றி கொண்டார்கள்.

﴿وَآتَيْنَاهُمَا الْكِتَابَ الْمُسْتَبِينَ﴾

117. அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்.

﴿وَهَدَيْنَاهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ﴾

118. அவ்விருவரையும் நேரான வழியிலும் நாம் செலுத்தினோம்.

﴿وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي الْآخِرِينَ﴾

119. பிற்காலத்திலும் அவ்விருவரின் கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.

﴿سَلَامٌ عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ﴾

120.
(ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்).

﴿إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ﴾

121. நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கிறோம்.

﴿إِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ﴾

122. நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் இருந்தனர்.

﴿وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ﴾

123. நிச்சயமாக இல்யாஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்.

﴿إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ﴾

124. அவர் தன் மக்களை நோக்கி, ‘‘நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?'' என்று கூறிய சமயத்தில்,

﴿أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ﴾

125. ‘‘படைப்பவர்களில் மிக அழகானவனை நீங்கள் புறக்கணித்து விட்டு, ‘பஅலு' என்னும் சிலையை வணங்குகிறீர்களா?

﴿اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبَائِكُمُ الْأَوَّلِينَ﴾

126. உங்கள் இறைவனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவனுமான அல்லாஹ்வை விட்டு விடுகிறீர்களா?''

﴿فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ﴾

127. ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள்.

﴿إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ﴾

128. அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களைத் தவிர, (நல்லடியார்களுக்கு நல்ல சன்மானமுண்டு.)

﴿وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ﴾

129. பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.

﴿سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ﴾

130. (ஆகவே உலகத்திலுள்ளவர்கள்) ‘‘இல்யாஸுக்கு ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாவதாகுக!'' (என்று கூறுகின்றனர்).

﴿إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ﴾

131. நிச்சயமாக நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.

﴿إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ﴾

132. நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் ஒருவராக இருந்தார்.

﴿وَإِنَّ لُوطًا لَمِنَ الْمُرْسَلِينَ﴾

133. நிச்சயமாக லூத்தும் நம் தூதர்களில் ஒருவர்தான்.

﴿إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ﴾

134. அவரையும் அவருடைய குடும்பம் முழுவதையும் பாதுகாத்துக் கொண்டோம்.

﴿إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ﴾

135. ஆயினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர, அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள்.

﴿ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ﴾

136. (பிறகு பாவம் செய்த) மற்றவர்களையும் நாம் அழித்து விட்டோம்.

﴿وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِمْ مُصْبِحِينَ﴾

137.
ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்காக ஷாம் தேசம் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களை கடந்து செல்கிறீர்கள்.

﴿وَبِاللَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ﴾

138. (இதைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெறவேண்டாமா?

﴿وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ﴾

139. நிச்சயமாக யூனுஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்.

﴿إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ﴾

140. (மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்).

﴿فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ﴾

141. அ(க்கப்பலில் உள்ள)வர்கள் சீட்டு (குலுக்கி)ப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்.

﴿فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ﴾

142. (அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்.

﴿فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ﴾

143. நிச்சயமாக அவர் நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால்,

﴿لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ﴾

144. (மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.

﴿۞ فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ﴾

145.
(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்.

﴿وَأَنْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِنْ يَقْطِينٍ﴾

146. ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச்செடியை முளைப்பித்தோம்.

﴿وَأَرْسَلْنَاهُ إِلَىٰ مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ﴾

147. பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம் தூதராக அனுப்பி வைத்தோம்.

﴿فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ﴾

148. அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டார்கள். ஆதலால், நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரை சுகமாக வாழவைத்தோம்.

﴿فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ﴾

149.
(நபியே!) அவர்களை கேட்பீராக: ‘‘(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? (விரும்புகிறீர்கள்.)

﴿أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ﴾

150.
அல்லது நாம் வானவர்களைப் பெண்களாக படைத்த(தாகக் கூறுகின்றனரே அ)தை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?

﴿أَلَا إِنَّهُمْ مِنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ﴾

151-152.
‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!

﴿وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ﴾

1. அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக!

﴿أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ﴾

153. (அதிலும்) ஆண் சந்ததிகளைவிட்டு, பெண் சந்ததிகளையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?

﴿مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ﴾

154. (இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நியாயம் (இருக்கிறது.) ஏன் இவ்வாறு (பொய்யாக) தீர்மானிக்கிறீர்கள்?

﴿أَفَلَا تَذَكَّرُونَ﴾

155. நீங்கள் இதை கவனித்துச் சிந்திக்க வேண்டாமா?

﴿أَمْ لَكُمْ سُلْطَانٌ مُبِينٌ﴾

156. அல்லது உங்களுக்கு (இதற்காக ஒரு) தெளிவான ஆதாரம் இருக்கிறதா?

﴿فَأْتُوا بِكِتَابِكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ﴾

157.
(கிறிஸ்தவர்களே! அவ்வாறு) நீங்கள் கூறுவது உண்மையாகவே இருப்பின், அதற்கு உங்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வாருங்கள்.

﴿وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ﴾

158. (நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர்.
ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர்.

﴿سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ﴾

159. அவர்கள் கூறும் இவ்வர்ணிப்புகளை விட்டு அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.

﴿إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ﴾

160. அல்லாஹ்வின் கலப்பற்ற நம்பிக்கையுள்ள அடியார்களைத் தவிர, (அவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள்.)

﴿فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ﴾

161, 162.
(நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.

﴿مَا أَنْتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ﴾

161, 162.
(நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.

﴿إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ﴾

163. நரகம் செல்லக்கூடியவனைத் தவிர.

﴿وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَعْلُومٌ﴾

164. (வானவர்கள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு;

﴿وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ﴾

165.
நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கிறோம்.

﴿وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ﴾

166. நிச்சயமாக நாங்கள் அவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருக்கிறோம்.

﴿وَإِنْ كَانُوا لَيَقُولُونَ﴾

167. (நபியே! இதற்குமுன் மக்காவாசிகளாகிய) அவர்கள் கூறிக் கொண்டிருந்ததாவது:

﴿لَوْ أَنَّ عِنْدَنَا ذِكْرًا مِنَ الْأَوَّلِينَ﴾

168. ‘‘முன்சென்றவர்களிடம் இருந்த வேதத்தைப் போன்று ஒரு வேதம் எங்களிடம் இருந்தால்,

﴿لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ﴾

169. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களாகி விடுவோம்'' என்றார்கள்.

﴿فَكَفَرُوا بِهِ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ﴾

170. எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் முடிவை) இவர்கள் அறிந்து கொள்வார்கள்.

﴿وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ﴾

171. தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம் வாக்கு நிச்சயமாக ஏற்பட்டு விட்டது.

﴿إِنَّهُمْ لَهُمُ الْمَنْصُورُونَ﴾

172. ஆதலால், நிச்சயமாக அவர்கள்தான் உதவி செய்யப்படுவார்கள்.

﴿وَإِنَّ جُنْدَنَا لَهُمُ الْغَالِبُونَ﴾

173. நிச்சயமாக நம் படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்)தான் வெற்றி பெறுவார்கள்.

﴿فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ﴾

174. ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரை (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீர் விலகியிரும்.

﴿وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ﴾

175. (இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீராக. அதிசீக்கிரத்தில் அவர்களும் அதைக் கண்டு கொள்வார்கள்.

﴿أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ﴾

176. (என்னே!) நம் வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?

﴿فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ﴾

177.
(நம் வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும் சமயத்தில், அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும்.

﴿وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ﴾

178. (நபியே!) அவர்களை நீர் சிறிது காலம் புறக்கணித்து விடுவீராக.

﴿وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ﴾

179. (அவர்களுக்கு வேதனை வருவதை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. அவர்களும் (அதை) நிச்சயமாகக் காண்பார்கள்.

﴿سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ﴾

180. அவர்களுடைய (தப்பான) வர்ணிப்புகளை விட்டும் மிக்க கண்ணியத்திற்குரிய உமது இறைவன் மிகப் பரிசுத்தமானவன்.

﴿وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ﴾

181. (அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் (அனைவர்) மீதும் (அவனுடைய) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!

﴿وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ﴾

182. புகழ் அனைத்தும் உலகத்தாரின் இறைவனான அல்லாஹ்வுக்கு உரித்தானது.

الترجمات والتفاسير لهذه السورة: