الشورى

تفسير سورة الشورى

الترجمة التاميلية

தமிழ்

الترجمة التاميلية

ترجمة معاني القرآن الكريم للغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي، نشرها مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة. عام الطبعة 1434هـ.

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ حم﴾

1, 2. ஹா மீம். அய்ன் ஸீன் காஃப்.

﴿عسق﴾

1, 2. ஹா மீம். அய்ன் ஸீன் காஃப்.

﴿كَذَٰلِكَ يُوحِي إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ اللَّهُ الْعَزِيزُ الْحَكِيمُ﴾

3. (நபியே! இந்த அத்தியாயம் உமக்கு அருளப்படுகிறது.
) இவ்வாறே உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க ஞானவானுமாகிய அல்லாஹ் (தன் வசனங்களை) வஹ்யி மூலம் அறிவித்து வந்திருக்கிறான்.

﴿لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۖ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ﴾

4. வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. (அனைவரையும் விட) அவன் மிக மேலானவன்; மிக மகத்தானவன்.

﴿تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ ۚ وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَنْ فِي الْأَرْضِ ۗ أَلَا إِنَّ اللَّهَ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ﴾

5. (மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும்.
(அந்நேரத்தில்) வானவர்களும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள்.
(மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக.

﴿وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ اللَّهُ حَفِيظٌ عَلَيْهِمْ وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ﴾

6.
எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கண்காணிக்கிறான். (நபியே!) அவர்களுக்கு நீர் பொறுப்பாளரல்ல.

﴿وَكَذَٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنْذِرَ أُمَّ الْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ ۚ فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ﴾

7. (நபியே!) இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்தோம்.
(இதைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களையும், நீர் எச்சரித்து, அனைவரையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுவீராக! அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சொர்க்கத்திற்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள்.

﴿وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَهُمْ أُمَّةً وَاحِدَةً وَلَٰكِنْ يُدْخِلُ مَنْ يَشَاءُ فِي رَحْمَتِهِ ۚ وَالظَّالِمُونَ مَا لَهُمْ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ﴾

8.
அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பியவர்களையே தன் அருளில் புகுத்துகிறான். அநியாயக்காரர்(களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; (அவர்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை.

﴿أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ ۖ فَاللَّهُ هُوَ الْوَلِيُّ وَهُوَ يُحْيِي الْمَوْتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ﴾

9.
(நபியே!) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா? (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) அல்லாஹ் (ஒருவன்)தான் உண்மையான பாதுகாவலன். அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன்தான் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.

﴿وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ﴾

10.
(நபியே! அவர்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘இதில் நீங்கள் எவ்விஷயத்தைப் பற்றித் தர்க்கித்துக் கொள்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது. அந்த அல்லாஹ்தான் எனது இறைவன். அவனையே நான் முற்றிலும் நம்பி அவனையே நான் முன்னோக்கி இருக்கிறேன்.''

﴿فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ جَعَلَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَمِنَ الْأَنْعَامِ أَزْوَاجًا ۖ يَذْرَؤُكُمْ فِيهِ ۚ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ﴾

11. அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கிறான்.
(ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.

﴿لَهُ مَقَالِيدُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ﴾

12. வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (அவன் விரும்பியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் (மக்களின் தன்மைகளையும்) நன்கறிந்தவன். (ஆகவே, அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.)

﴿۞ شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّىٰ بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰ ۖ أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ ۚ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ ۚ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ﴾

13.
(நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான்.
ஆகவே, (நபியே!) நாம் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், ‘‘நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும்.
ஆகவே, அவர்களை எதன் பக்கம் நீங்கள் அழைக்கிறீர்களோ அ(ந்த ஓரிறை கொள்கையான)து, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர்களையே தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். தன்னை முன்னோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்.

﴿وَمَا تَفَرَّقُوا إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۚ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى لَقُضِيَ بَيْنَهُمْ ۚ وَإِنَّ الَّذِينَ أُورِثُوا الْكِتَابَ مِنْ بَعْدِهِمْ لَفِي شَكٍّ مِنْهُ مُرِيبٍ﴾

14.
அவர்கள் தங்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவே தவிர (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை.
(அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உமது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை)முடிவுபெற்றே இருக்கும்.
மேலும், அவர்களுக்குப் பின்னர், எவர்கள் அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கப்பட்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர்.

﴿فَلِذَٰلِكَ فَادْعُ ۖ وَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ ۖ وَقُلْ آمَنْتُ بِمَا أَنْزَلَ اللَّهُ مِنْ كِتَابٍ ۖ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمُ ۖ اللَّهُ رَبُّنَا وَرَبُّكُمْ ۖ لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ ۖ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمُ ۖ اللَّهُ يَجْمَعُ بَيْنَنَا ۖ وَإِلَيْهِ الْمَصِيرُ﴾

15.
ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி)னளவில் (அவர்களை) நீர் அழைப்பீராக, உமக்கு ஏவப்பட்டபடி நீர் உறுதியாக இருப்பீராக, அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்.
மேலும், (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: அல்லாஹ் வேதமென்று எதை இறக்கி வைத்தானோ அதையே நான் நம்பிக்கை கொள்கிறேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான்.
எங்கள் செயல்களுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயல்களுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.

﴿وَالَّذِينَ يُحَاجُّونَ فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا اسْتُجِيبَ لَهُ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ رَبِّهِمْ وَعَلَيْهِمْ غَضَبٌ وَلَهُمْ عَذَابٌ شَدِيدٌ﴾

16.
எவர்கள் (நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வுக்குப் பதில் கூறிய பின்னர், அவனைப் பற்றி (வீணாக)த் தர்க்கித்து(க் குழப்பத்தை உண்டு பண்ணி)க் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும். அதனால், அவர்கள் மீது (அவனுடைய) கோபமும் ஏற்பட்டு கடினமான வேதனையும் அவர்களுக்குக் கிடைக்கும்.

﴿اللَّهُ الَّذِي أَنْزَلَ الْكِتَابَ بِالْحَقِّ وَالْمِيزَانَ ۗ وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ قَرِيبٌ﴾

17. அல்லாஹ்தான் முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை இறக்கி வைத்தான். மேலும், அவனே (நீங்கள் நீதமாக நடந்துகொள்ள) தராசையும் படைத்தான். (நபியே!) மறுமை நெருங்கிவிட்டதென்பதை நீர் அறிவீராக!

﴿يَسْتَعْجِلُ بِهَا الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِهَا ۖ وَالَّذِينَ آمَنُوا مُشْفِقُونَ مِنْهَا وَيَعْلَمُونَ أَنَّهَا الْحَقُّ ۗ أَلَا إِنَّ الَّذِينَ يُمَارُونَ فِي السَّاعَةِ لَفِي ضَلَالٍ بَعِيدٍ﴾

18. மறுமையை நம்பாதவர்கள் அதைப் பற்றி (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) அவசரப்படுகின்றனர்.
ஆயினும், எவர்கள் அதை நம்பியிருக்கிறார்களோ அவர்கள் அதைப் பற்றிப் பயந்து கொண்டிருப்பதுடன், நிச்சயமாக அது (வருவது) உண்மைதான் என்றும் திட்டமாக அறிவார்கள்.
எவர்கள் மறுமையைப் பற்றிச் சந்தேகத்தில் இருக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெகு தூரமானதொரு வழிகேட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை (நபியே!) அறிந்து கொள்வீராக.

﴿اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ ۖ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ﴾

19.
அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன் ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகிறான். அவன்தான் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.

﴿مَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الْآخِرَةِ نَزِدْ لَهُ فِي حَرْثِهِ ۖ وَمَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ نَصِيبٍ﴾

20. எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகிறானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகிறானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம். எனினும், அவனுக்கு மறுமையில் ஒரு பாக்கியமுமில்லை.

﴿أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ ۚ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ ۗ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ﴾

21.
அல்லாஹ் அனுமதிக்காத எதையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (ஒவ்வொரு செயலுக்கும் தக்க) கூலி கொடுப்பது மறுமையில்தான் என்று இறைவனுடைய தீர்மானம் ஏற்பட்டிருக்காவிடில், (இதுவரை) அவர்களுடைய காரியம் முடிவு பெற்றேயிருக்கும். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு.

﴿تَرَى الظَّالِمِينَ مُشْفِقِينَ مِمَّا كَسَبُوا وَهُوَ وَاقِعٌ بِهِمْ ۗ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي رَوْضَاتِ الْجَنَّاتِ ۖ لَهُمْ مَا يَشَاءُونَ عِنْدَ رَبِّهِمْ ۚ ذَٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ﴾

22.
(நபியே!) வரம்பு மீறிய இவர்கள், தங்கள் செயலின் காரணமாக(த் தங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று) பயந்து கொண்டிருப்பதை (அந்நாளில்) நீர் காண்பீர். அது அவர்களுக்குக் கிடைத்தே தீரும்.
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள், சொர்க்கங்களில் உள்ள பூங்காவனங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்கள் இறைவனிடம் அவர்களுக்குக் கிடைக்கும். இதுதான் மிகப் பெரும் சிறப்பாகும்.

﴿ذَٰلِكَ الَّذِي يُبَشِّرُ اللَّهُ عِبَادَهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ۗ قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَىٰ ۗ وَمَنْ يَقْتَرِفْ حَسَنَةً نَزِدْ لَهُ فِيهَا حُسْنًا ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ شَكُورٌ﴾

23. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன் (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே.
(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இதற்காக நான் ஒரு கூலியும் கேட்கவில்லை, உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்களைத் தேடிக் கொள்கிறாரோ, அவருக்கு நாம் அதில் நன்மையை அதிகரிக்கச் செய்கிறோம். ''நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை(யும்) அங்கீகரிப்பவனும் ஆவான்.

﴿أَمْ يَقُولُونَ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا ۖ فَإِنْ يَشَإِ اللَّهُ يَخْتِمْ عَلَىٰ قَلْبِكَ ۗ وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ ۚ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ﴾

24.
(நபியே!) அல்லாஹ்வின் மீது நீர் பொய்யைக் கற்பனை செய்து கூறுவதாக அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நம் இவ்வேதத்தை அவர்களுக்கு நீர் ஓதிக்காண்பிக்க முடியாதவாறு) அல்லாஹ் நாடினால், உமது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு இருப்பான். (ஆகவே, அவர்களுடைய இக்கூற்று முற்றிலும் தவறானதாகும்.) அல்லாஹ்வோ, பொய்யை அழித்துத் தன் வசனங்களைக் கொண்டே உண்மையை உறுதிப்படுத்துவான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் (ரகசியமாக) உள்ளவற்றையும் நன்கறிந்தவன்.

﴿وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُو عَنِ السَّيِّئَاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ﴾

25. அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்துக் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான்.

﴿وَيَسْتَجِيبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ ۚ وَالْكَافِرُونَ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ﴾

26.
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களின் பிரார்த்தனைகளையும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான். நிராகரிப்பவர்களுக்குக் கடினமான வேதனைதான் கிடைக்கும்.

﴿۞ وَلَوْ بَسَطَ اللَّهُ الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلَٰكِنْ يُنَزِّلُ بِقَدَرٍ مَا يَشَاءُ ۚ إِنَّهُ بِعِبَادِهِ خَبِيرٌ بَصِيرٌ﴾

27.
அல்லாஹ் தனது (எல்லா) அடியார்களுக்கு(ம் கூடுதல் குறைவின்றி) பொருளை விரித்து(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் அநியாயம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள். ஆகவே, (அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு)தான் விரும்பிய அளவே (அவர்களுக்குக்) கொடுத்து வருகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் தன்மையை நன்கறிந்தவனும், (அவர்களுடைய செயலை) உற்று நோக்குபவனும் ஆவான்.

﴿وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوا وَيَنْشُرُ رَحْمَتَهُ ۚ وَهُوَ الْوَلِيُّ الْحَمِيدُ﴾

28.
(மனிதர்கள்) நம்பிக்கையிழந்ததன் பின்னரும், அவன்தான் மழையை இறக்கி வைத்துத் தன் அருளை (பூமியில்) பரப்புகிறான். அவனே பாதுகாவலன்; என்றும் புகழுக்குரியவன்.

﴿وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِنْ دَابَّةٍ ۚ وَهُوَ عَلَىٰ جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ﴾

29.
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், அவற்றில் கால்நடை (முதலிய பல உயிரினங்)களை (ஆங்காங்கு) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். ஆகவே, அவன் விரும்பியபோது (மரணித்த பின்னரும்) அவற்றை ஒன்று சேர்க்க ஆற்றுலுடையவன் ஆவான்.

﴿وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ﴾

30. ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், (அவற்றில்) அனேகமானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.

﴿وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ ۖ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ﴾

31. நீங்கள் பூமியில் (ஓடி ஒளிந்து) அவனை தோற்கடித்துவிட முடியாது. மேலும், அல்லாஹ்வையன்றி (உங்களை) காப்பாற்றுபவனும் (உங்களுக்கு) இல்லை; உதவி செய்பவனும் (உங்களுக்கு) இல்லை.

﴿وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ﴾

32. கடலில் செல்லும் மலைகளைப் போன்ற கப்பல்களும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.

﴿إِنْ يَشَأْ يُسْكِنِ الرِّيحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلَىٰ ظَهْرِهِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ﴾

33. அவன் விரும்பினால், காற்றை நிறுத்திவிடுவான். கப்பல்கள் கடலில் இருந்தவாறே அசையாது நின்றுவிடும்.
(அத்தகைய சிரமங்களை அனுபவித்துச்) சகிப்பவர்களும் (கரை சேர்ந்தபின், மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துபவர்களும் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகளில் இருக்கின்றன.

﴿أَوْ يُوبِقْهُنَّ بِمَا كَسَبُوا وَيَعْفُ عَنْ كَثِيرٍ﴾

34. அல்லது அவர்களின் (தீய) செயலின் காரணமாக, அவற்றை (கடலில்) அழித்திருப்பான். ஆயினும், (அவர்களுடைய தவறுகளில்) அதிகமானவற்றை மன்னித்து விடுகிறான்.

﴿وَيَعْلَمَ الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِنَا مَا لَهُمْ مِنْ مَحِيصٍ﴾

35.
அவனுடைய வசனங்களில் (வீணாகத்) தர்க்கிப்பவர்களையும் அவன் நன்கறிவான்; (அவனுடைய வேதனையிலிருந்து) அவர்களுக்கு தப்ப வழி ஏதும் இல்லை.

﴿فَمَا أُوتِيتُمْ مِنْ شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَىٰ لِلَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ﴾

36.
(இங்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் (நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்ப இன்பங்களே! நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே நம்பியிருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும்.

﴿وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ﴾

37.
(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும்பாவமான காரியங்களையும், மானக்கேடான விஷயங்களையும் விட்டு விலகி (இருப்பதுடன், பிறரின் தகாத செயல்களால்) கோபமடையும் சமயத்தில் (கோபமூட்டியவர்களை) மன்னித்து விடுவார்கள்.

﴿وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ﴾

38. மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோசனைக்குக் கொண்டு வருவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.

﴿وَالَّذِينَ إِذَا أَصَابَهُمُ الْبَغْيُ هُمْ يَنْتَصِرُونَ﴾

39. அவர்களுக்கும் கொடுமை நிகழ்ந்தால், அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள்.

﴿وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ﴾

40. தீமைக்குக் கூலியாக அதைப்போன்ற தீமையையே செய்வார்கள். (அதற்கு அதிகமாக அல்ல.
) எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து, அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) அநியாயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

﴿وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهِ فَأُولَٰئِكَ مَا عَلَيْهِمْ مِنْ سَبِيلٍ﴾

41.
எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அநியாயத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால், அதனால் அவர் மீது ஒரு குற்றமுமில்லை.

﴿إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ يَظْلِمُونَ النَّاسَ وَيَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ﴾

42.
குற்றமெல்லாம் அளவு மீறி மனிதர்கள் மீது அநியாயம் செய்து, நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்பவர்கள் மீதுதான். இத்தகையவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.

﴿وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ﴾

43. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும்.

﴿وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ وَلِيٍّ مِنْ بَعْدِهِ ۗ وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا الْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَىٰ مَرَدٍّ مِنْ سَبِيلٍ﴾

44.
எவர்களையேனும் (அவர்களின் பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டால், அதற்குப் பின்னர் அவர்களை பாதுகாப்பவர் ஒருவரும் இருக்கமாட்டார்.
(நபியே!) வரம்பு மீறி அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் கண்ணால் கண்ட சமயத்தில் ‘‘இதிலிருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா?'' என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்.

﴿وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ الذُّلِّ يَنْظُرُونَ مِنْ طَرْفٍ خَفِيٍّ ۗ وَقَالَ الَّذِينَ آمَنُوا إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ ۗ أَلَا إِنَّ الظَّالِمِينَ فِي عَذَابٍ مُقِيمٍ﴾

45.
மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (வேதனையைக்) கடைக் கண்ணால் பார்த்தவண்ணம் அவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படுவதையும் நீர் காண்பீர்.
மேலும், நம்பிக்கை கொண்டவர்கள் (அவர்களை நோக்கி) ‘‘எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் (இம்மையில்) நஷ்டத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள் மறுமையில் நிச்சயமாக முற்றிலும் நஷ்டத்தை அடைந்தவர்கள்தான்'' என்று கூறுவார்கள்.
நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் தங்கிவிடுவார்கள் என்பதை நீர் அறிந்துகொள்வீராக.

﴿وَمَا كَانَ لَهُمْ مِنْ أَوْلِيَاءَ يَنْصُرُونَهُمْ مِنْ دُونِ اللَّهِ ۗ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ سَبِيلٍ﴾

46. அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நண்பர்கள் (அந்நாளில்) அவர்களுக்கு இருக்கமாட்டார்கள். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகிறானோ, அவர்களுக்கு(த் தப்ப) ஒரு வழியுமில்லை.

﴿اسْتَجِيبُوا لِرَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا مَرَدَّ لَهُ مِنَ اللَّهِ ۚ مَا لَكُمْ مِنْ مَلْجَإٍ يَوْمَئِذٍ وَمَا لَكُمْ مِنْ نَكِيرٍ﴾

47.
அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் உங்களுக்குத் தப்புமிடம் கிடைக்காது. (உங்கள் குற்றத்தை) நீங்கள் மறுக்கவும் முடியாது.

﴿فَإِنْ أَعْرَضُوا فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا ۖ إِنْ عَلَيْكَ إِلَّا الْبَلَاغُ ۗ وَإِنَّا إِذَا أَذَقْنَا الْإِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا ۖ وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ الْإِنْسَانَ كَفُورٌ﴾

48.
(நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்து விட்டால், (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உம்மை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம் தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உம் மீது கடமை அல்ல. நம் அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப் பற்றி அவன் சந்தோஷப்படுகிறான்.
அவனுடைய கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கொரு தீங்கு ஏற்பட்டால் நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாகி (இறைவனையே எதிர்க்க ஆயத்தமாகி) விடுகிறான்.

﴿لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ﴾

49. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. இவற்றைத் தவிர, அவன் விரும்பியதையும் படைக்கிறான். அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான்.

﴿أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا ۖ وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا ۚ إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ﴾

50. அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கிறான். அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகிறான்.
நிச்சயமாக அவன் (அவரவர்களின் தகுதியை) நன்கறிந்தவனும், (தான் விரும்பியவாறு செய்ய) பேராற்றலுடையவனும் ஆவான்.

﴿۞ وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ ۚ إِنَّهُ عَلِيٌّ حَكِيمٌ﴾

51. அல்லாஹ் (நேருக்குநேர்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒருவருக்குமில்லை.
எனினும், வஹ்யின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது வானவர்களை அனுப்பிவைத்து வஹியின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை (மனிதனுக்கு) அறிவிக்கிறான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மேலானவனும் மிக ஞானமுடையவனுமாவான்.

﴿وَكَذَٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا ۚ مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَٰكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا ۚ وَإِنَّكَ لَتَهْدِي إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ﴾

52. (நபியே!) இவ்வாறே உமக்கு நம் கட்டளையை வஹ்யின் மூலமாக அறிவிக்கிறோம். (இதற்கு முன்னர்) நீர் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை.
ஆயினும், (இந்த வேதத்தை உமக்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்து) அதை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கிறீர்.

﴿صِرَاطِ اللَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ أَلَا إِلَى اللَّهِ تَصِيرُ الْأُمُورُ﴾

53. அதுதான் அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவையே. சகல காரியங்களும் அவனிடம் வந்தே தீரும் என்பதை (நபியே!) அறிந்து கொள்வீராக!

الترجمات والتفاسير لهذه السورة: